தென்கொரியாவுக்கு ராணுவ உதவி வழங்கும் விதமாக அமெரிக்கா அந்நாட்டுடன் அணு ஆயுத ஆலோசனை மேற்கொண்டது. அப்போது அமெரிக்காவின் யஎஸ்எஸ் கெண்டுகி எனும் நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் துறைமுகமான பூஷன்  நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த வடகொரியா அமெரிக்கா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நீர்மூழ்கிக் கப்பலை தென்கொரியாவில் நிறுத்துவதை கைவிடாவிட்டால் அணு ஆயுத தாக்குதல் மேற்கொள்வோம் என எச்சரித்தது.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தென்கொரியா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அணு ஆயுத தாக்குதல் ஏதேனும் வடகொரியா மூலமாக நடத்தப்பட்டால் அந்நாட்டில் கிங் ஜாங் உன் ஆட்சி முடிந்துவிடும். தென்கொரியா – அமெரிக்க கூட்டணிக்கு எதிராக வடகொரியா அணு ஆயுத தாக்குதல் மேற்கொண்டால் அதற்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.