நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஊடகங்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கூகுளில் விளம்பரத்திற்கு 30 நாளில் ரூ.30 கோடி பாஜக செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வட இந்திய மாநிலங்களை குறிவைத்து இந்த ஊடக விளம்பரங்கள் அதிகம் வெளியிடப்படுகின்றன.

தேர்தலில் விளம்பரங்கள் மூலம் அரசியல் காட்சிகள் ஆதாயம் தேடும் வழக்கம் தற்போதைய காலங்களில் அதிகரித்துள்ளது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.