சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் தற்போது வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனையான நிலையில் தற்போது ‌ வெங்கடேஷ் ஐயரும் அவர்கள் வரிசையில் 23 கோடி ரூபாய் வரையில் ஏலத்தில் எடுத்துள்ளனர்