மக்களவை தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது . ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பதிவு தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி அன்று முடிவடைகிறது. அனைத்து தொகுதிகளின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்படும். தேர்தலுக்கு முன்பாக மாநில அரசுகள் ஒவ்வொன்றாக தங்களுடைய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவித்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அகவிலைப்படி உயர்த்தி உள்ளது. அதேபோல மற்ற மாநிலங்களும் உயர்த்தியதால் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிக்க தொடங்கும். இது ஏராளமான ஊழியர்களுக்கு பயான் அளிக்கும். அவர்களுடைய நிலுவை தொகை நேரடியாக கணக்கில் மாற்றப்படும் . அது தவிர சத்தீஸ்கர் அரசும் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.