இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே UPI-PayNow பண பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் UPI பரிவர்த்தனை போல சிங்கப்பூரில் PayNow என்ற பணப்பரிமாற்றம் வசதி உள்ளது. இந்த இரண்டு பண பரிமாற்ற முறை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் காணொளி மூலமாக பங்கேற்றனர். இதனால் இனி இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளவர்கள் UPI-PayNow மூலம் போனில் பணம் அனுப்ப முடியும்.

இந்தப் பணப் பரிமாற்றம் முறை இணைப்பு சேவை இரு நாட்டு மக்களுக்கு கிடைத்த பரிசு என்றார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான நட்பு மிகப் பழமையானது எனவும் சோதனையான காலகட்டத்திலும் துணை நின்றதாகவும் பிரதமர் மோடி கூறினார்.