தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 37,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் பங்களிப்பு மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை கிண்டியில்  தொடங்கி வைத்தார்.

அத்துடன் இத்திட்டத்துக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்ததோடு தொண்டர்களிடமும் நன்கொடை கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.  இந்நிலையில், திமுக அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் இணைந்து தங்கள் ஒருமாத சம்பளம், 1 கோடியே 29 லட்சத்து 15 ஆயிரத்திற்கான காசோலையை முதல்வரிடம் கொடுத்துள்ளனர். கூட்டணி கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களும் ஒருமாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்.