மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்த அப்பு என்ற படத்தில் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ரக்ஷிதா. சினிமா குடும்பத்தைச் சேர்ந்த இவர் சிம்புவின் தம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்தார் . முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்  பிடித்து விட்டார். அடுத்ததாக விஜய்யின் மதுர படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ் சினிமா பக்கம் தலை காட்டவில்லை. 2007 ஆம் வருடம் கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார் .

இந்த நிலையில் சிம்பு பட வீடியோவையும், ரக்ஷிதாவின் மற்றொரு விடியோவையும் சேர்த்து எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்? என்று இணையவாசிகள் சமூக வலைதளங்களில் போஸ்டர் செய்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது. திருமணம் குழந்தை என்று ஆன பிறகு பெண்கள் வெயிட் போடுவது சகஜம்தான். ஆனால் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே ரக்ஷிதா பிரேம் என்று ரசிகர்கள் ஆச்சரியமாக பேசி வருகிறார்கள்.

கர்ப்பமாக இருந்தபோது ரக்ஷிதாவின் உடல் எடை அதிகரித்தது. குழந்தை பிறந்த பிறகு மேலும் அதிகரித்தது. எடையை குறைக்க முயற்சி செய்து காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் எடையை குறைக்க முயன்றார். அந்த சிகிச்சையால் அவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது. இதனையடுத்து எடை கூடினால் கூடி விட்டுப் போகட்டும் அதைப்பற்றி கவலை இல்லை. எப்படி இருக்கிறோமோ அதுவே சந்தோஷம் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டாராம்.