
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்குனர் பி. வாசு இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகியாக நடிக்கிறார்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கீரவாணி இசையமைக்க வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்டப்பட படிப்பு நிறைவடைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அதனுடன் ஒரு புகைப்படத்தையும் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர் வடிவேலுவை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து முழுசா சந்திரமுகியாக மாறிய வடிவேலு என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Mulusa Chandramukhiya maruna Vadivelu, iluthu aanaikum Ragava Lawrance 😄 @Vadiveluhere
#funduringshoots#chandramuki2 pic.twitter.com/4G8alzzavt
— Raghava Lawrence (@offl_Lawrence) February 23, 2023