சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு புஷ்பா 2 தி ரூல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. புஷ்பா 2 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது.

இந்த நிலையில் பான் இந்தியா அளவில் உருவான புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 250 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படம் மூன்று நாட்களில் 500 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்திய சினிமாவில் அதிவேகமாக 500 கோடி வசூல் செய்த சாதனை படைத்துள்ளது புஷ்பா 2 திரைப்படம்.