பிரபல பின்னணி பாடகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பங்கஜ் உதாஸ் (72) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. பங்கஜ் உதாஸின் சித்தி ஆயி ஹை, அவுர் அஹிஸ்தா கிஜியே பாடின் பாடல்கள் இந்தியில் மிகவும் பிரபலமான பாடல்களாக விளங்குகிறது. பங்கஜ் உதாஸின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.