தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினார். இதேபோன்று நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா விக்ரம், இயக்குனர்கள் அட்லி, பாரதிராஜா மற்றும் மணிரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதோடு பாலிவுட் நடிகை ரன்வீர் சிங்கும் திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் திருமண விழாவின்போது இயக்குனர் அட்லீ, ரன்வீர் சிங் நடிகை அதிதி சங்கர் ஆகியோர் நடிகர் விஜயின் அப்படி போடு பாடலுக்கு நடனம் ஆடினார். அதோடு நடிகர் தனுஷின் வாத்தி கம்மிங் பாடலுக்கும் நடனம் ஆடினர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.