தெலுங்கு சினிமாவில் முன்னணி  நடிகை ஆக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். இவர் நடனம் ஆடுவதில் கில்லாடி. நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் மகேஷ்பாபு உடன் சேர்ந்து நடித்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டது செம ஹிட் அடித்தது. இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தில் தற்போது நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாகிறது. முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனமாடி கலக்கிய நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தில் நடிகை ஸ்ரீலீலா Kissik என்ற பாடலுக்கு அவர் நடனமாடவுள்ளார். மேலும் இவர் தற்போது புஷ்பா 2 படத்தில் நடனம் ஆடுவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.