இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராய் பற்றி ஒரு பேட்டியில் பேசிய கருத்தை தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் ஜெயா பச்சன் ஒரு மகளுக்கும் மருமகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளார். அதாவது “ஐஸ்வர்யாவிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில் அவரது அம்மா ஏற்கனவே அவரிடம் கண்டிப்பாக இருந்திருப்பார் என நம்புகிறேன்” எனவும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.