தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பது மட்டுமின்றி பலருக்கும் உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் படிப்பு செலவுக்கு அண்மையில் உதவி இருந்தார். தன்னுடைய படப்பிடிப்பு தளத்துக்கு ரசிகர்கள் வந்தால் கூட அல்லு அர்ஜுன் கோபப்பட மாட்டார். அதன் பிறகு மாதந்தோறும் தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதற்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தன்னுடைய ரசிகர்களையும் சந்தித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.

அந்த வகையில் தற்போதும் நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தன்னுடைய கைகளில் ஏந்தியபடி அல்லு அர்ஜுன் புகைப்படம் எடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விஜயும் ரசிகர்களை சந்தித்தபோது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தன்னுடைய கைகளில் ஏந்தியபடி புகைப்படம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.