தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலமான தனுஷ் தற்போது இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுசு இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்ததாக இட்லி கடை என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராஜ்கிரன், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமம் 12 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு தனுசு இயக்கிய ராயன் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் 8 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.