ராமாயண கதையை ஒரு பகுதியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஆதிபுரூஸ் திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதில் ராமனாக பாகுபலி புகழ் பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணன் கதாபாத்திரத்தில் சயிப் அலிக்கான் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக காட்ட நடிகர்கள் முன்வந்துள்ளனர். இதற்காக தயாரிப்பாளர் அபிஷேக் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் பத்தாயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உள்ளதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் ராம்சரனும் 10,000 டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.