ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி உலகப் போலியோ தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் போலியோ நோயின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இளம் பிள்ளைவாதம் என்னும் போலியோ நோய்க்கு எதிராக முதலில் வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டுபிடித்தவர் ஜோனஸ் சால்க். இவரது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ரோட்டரி இன்டர்நேஷனல் எனும் அமைப்பாளர் உலக போலியோ தினம் கொண்டாடப்பட்டது.

அந்த அமைப்பு இந்தியா உட்பட வட கிழக்கு பகுதிகளை போலியோ அற்ற பகுதிகளாக மார்ச் மாதம் 27-ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு அறிவித்தது. கடந்த 1988-ஆம் ஆண்டு உலகளாவிய போலியோ ஒழிப்பு திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டம் இளம்பிள்ளை வாதத்தை உண்டாக்கும் போலியோ வைரஸ்களை அழிப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது போலியோ வைரஸ் 125 நாடுகளில் நிலவில் வந்தது. தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் போலியோமிஎலிட்டிஸ் கிருமியால் உண்டாகும் போலியோ நோய் ஐந்து வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மலம் வழியாக மற்றவர்களுக்கு பரவுகிறது. மாசடைந்த நீர், உணவு உட்கொள்ளும் போது வைரஸ் குடலில் பெருகி நரம்பு மண்டலத்தில் குருதியோட்டம் வழியாக கலந்து வாதத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாளில் போலியோவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.