ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறும் கிரிக்கெட் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக பி.சி.சி.ஐ பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.

மற்ற அனைத்து அணிகளுடன் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோதும். இதனையடுத்து லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4  இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பின்னர் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் மோதும். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி உலக கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 33 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதனையடுத்து இறுதி சுற்றில் தோல்வியை தழுவி 2-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16.5 கோடியும், அரையிறுதிகளில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.6.63 கோடியும் பரிசாக அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..