இந்தியாவில் தற்போது 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகியவை புழக்கத்தில் உள்ளது. சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இநிநிலையில் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து இருக்கும். ஆனால் ஒரே ஒரு ரூபாய் நோட்டில் மட்டும் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து இருக்காது. அது எந்த ரூபாய் நோட்டு என்று உங்களுக்கு தெரியுமா.? அதாவது ஒரு ரூபாய் நோட்டு தவிர மற்ற அனைத்து ரூபாய் நோட்டுகளும் இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படுகிறது. ஒரு ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இந்திய அரசால் அச்சிடப்படுகிறது.

இந்த ஒரு ரூபாய் நோட்டுகளில் ஆளுநருக்கு பதிலாக நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இருக்கும். இந்தியாவில் கடந்த 1916 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த நிலையில், கடந்த 1926 ஆம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 1940 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு 1944 ஆம் ஆண்டு வரை அச்சிடும் பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி தொடங்கியது. இந்த நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிதி துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதன் காரணமாகத்தான் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பதிலாக நிதித்துறை செயலாளரின் கையெழுத்து ஒரு ரூபாய் நோட்டுகளில் இருக்கிறது.