Goat திரைப்படத்தின் இளைய தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் மகன் மற்றும் இளம் நடிகருமான சண்முக பாண்டியன் கோரிக்கை ஒன்றை விஜயிடம் வைத்துள்ளார். தனது படைத்தலைவன் திரைப்படத்தின் டீசரை தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர வேண்டும் என விஜயிடம் கேட்டாராம் சண்முக பாண்டியன்.

இதற்கு விஜய் இதெல்லாம் சின்ன உதவியாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது கூறுங்கள். நானே நேரடியாக வருகிறேன் என்று கூறினாராம். விஜயின்  சினிமா வாழ்க்கை விஜயகாந்த் அவர்களால் தான் மக்களிடையே பிரபலமானது. இது விஜய் விஜயகாந்த் அவர்களுக்கு செய்யும் கைமாறு என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்