இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்கீப் எனும் ஐடியில் ஆஷிஷ் ஜோஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக எடுக்கபட்ட ஒருசில படங்களை பகிர்ந்துள்ளார். Grandmas Skating எனும் தலைப்புடன் அந்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. அதில் 4 படங்கள் இருக்கிறது.

அதாவது வயதான பெண்கள் ஸ்கேட்டிங் செய்வது போல் படத்தில் இடம்பெற்றுள்ளது. சில சமயங்களில் பெண்களின் உடை மற்றும் இடத்தின் சிறப்பியல்புகளை கவனிக்கும் போது படங்கள் உண்மையானவையா என தவறாக புரிந்துகொள்ளலாம். அந்த படத்தில் சிலர் கேரளா பெண்களை போல் சட்டை மற்றும் வேட்டி அணிந்திருந்தனர். இது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ashish Jose (@tarqeeb)