ரிசர்வ் வங்கியானது அமேசான் பே, கூகுள் பே உள்ளிட்ட 32 UPI செயலிகளுக்கு லைசென்ஸ் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற PAYTM-மின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் லைசன்ஸ் பெறும் வரை புதிய வாடிக்கையாளரை இணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் போன் பே, பாரத் பே உள்ளிட்ட 18 செயலி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறியுள்ளது . லைசென்ஸ் பெற்ற செயலிகளை மட்டும் பயன்படுத்துமாறு வணிகர்கள், விற்பனையகங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.