பணவியல் கொள்கை குழு உடனான ஆலோசனைக்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததா சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி இனி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டது. மேலும் இனி கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகளிலேயே பயனர்கள் கிரெடிட் கார்டு போன்ற வசதிகளை பெறுவார்கள்.

இந்த அம்சத்தில் வங்கிகள் மூலம் பயனர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு யூபிஐ உடன், கிரெடிட் கார்ட்களை இணைத்து பேமெண்ட் செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது. இதனால் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், கிரெடிட் கார்டு சேவையை, யூபிஐ வழியாக பெறலாம் .