மத்திய பட்ஜெட் 2023-24 வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் மீது சாமானிய மக்கள் முதல் தொழில்துறையினர் வரை பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்க உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் உணவு, எரிபொருள், உரங்கள் போன்றவைகளுக்கு மானியத்தை குறைக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நிறுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தால் அரசுக்கு 3.91 லட்சம் கோடி செலவாகும் நிலையில் திட்டத்தினை நிறுத்தினால் அந்த பணம் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பட்ஜெட்டில் உணவு மானியம் 2.3 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு உரங்களுக்கான மானியம் 2.2 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு கச்சா எண்ணெய்களுக்கான மானியமும்  குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.