நடிகர் விஜய் நடிக்கும் 68-வது படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஆங்கில புத்தாண்டை ஒட்டி விஜயின் 68வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் நடிகர் விஜயின் 68 வது திரைப்படத்தின் போஸ்டர் 6 மணிக்கு வெளியாகி உள்ளது. The Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் இருப்பது போன்று போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் 68வது திரைப்படத்தின் அப்டேட்  புத்தாண்டு கொண்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்டாக  வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் பார்வை வெளியாகி உள்ளது.. இதில் இரண்டு விஜய் இருக்கிறார்கள். ஒரு விஜய் வயதான தோற்றத்திலும், ஒரு விஜய் இளமையாக இருக்கின்றார். இந்த படம் ஒரு டைம் ட்ராவல் படம் என கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கு விஜயின் 68வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், அரவிந்த்,  சினேகா, லைலா, ரம்யா கிருஷ்ணன், இவானா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.