தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான TET 2-ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை கணினி வழியில் இந்த தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. இதனை தேர்வர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்க இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.