நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறதா என்பதை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக புதுச்சேரியில் 1-9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படுமா? என அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைரஸ் காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை. தேவையில்லாத பதற்ற வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.