நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்புக்குரிய  சபாநாயகர் அவர்களே….  2014இல்  30 ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தின் மக்கள், பெரும்பான்மையோடு ஒரு ஆட்சியை எங்களுக்கு அமைக்க ஒரு  வாய்ப்பு தந்தார்கள். 2019திலும் எங்களுடைய செயல்பாடுகளை பார்த்துவிட்டு, அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றும் திறமை யாரிடம் இருக்கிறது என்பதை கண்டு ? நாடு நன்றாக புரிந்து கொண்டு,  2019 அவர்கள் மீண்டும் ஒருமுறை எங்களை  மக்களை சேவை செய்வதற்கான வாய்ப்பை கொடுத்தது. அதிக வலிமையோடு வாய்ப்பு கொடுத்தது.

மதிப்புக்குரிய சபாநாயகர் அவர்களே…  இந்த அவையினை அமர்ந்திருக்கக்கூடிய ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்பு என்னவென்றால் ? இந்த பாரத இளைஞர்களின் கனவுகளை, ஆசைகளை அவர்கள் வேலை செய்ய நினைக்கைன்றர்கள், பணி செய்ய நினைக்கிறார்கள்…  அவர்களுக்கான பணியை நாம் அவர்களுக்கு தர வேண்டும். ஆட்சியிலிருந்து கொண்டு இந்த பொறுப்பினை நிறைவேற்ற நாங்கள் மிகவும் உழைத்திருக்கிறோம்.

நாட்டின் இளைஞர்களுக்கு ஊழல் அற்ற ஒரு ஆட்சியை தந்திருக்கிறோம்.  நாங்கள் இந்திய இளைஞர்களுக்கு… தொழில் நுட்ப வல்லுநருக்கு… திறந்த வெளியிலேயே… வானத்திலே பறப்பதற்கான வாய்ப்பினை,  ஒரு நேரத்தை கொடுத்து இருக்கிறோம். பிரிந்து கிடந்த இந்த இந்தியாவை மிக உயரத்திற்கு கொண்டு செல்கின்ற பணியை நாங்கள் செய்திருக்கிறோம்.

உலகம் நம்மை புரிந்து கொண்டிருக்கிறது. உலகத்தின்  முன்னேற்றத்தில் இந்தியா  பங்களிக்கும் நிலையிலேயே இருக்கிறது என்பதை உலகம் புரிந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.