ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் 17,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு வாரத்தில் எஸ்பிஐ வங்கியில் மாற்றப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வாபஸ் பெறுவதாக அறிவித்த ஒரு வாரத்தில், ரூ.17,000 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் எஸ்பிஐக்கு வந்துள்ளன.

இதில் ரூ.14,000 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் செலுத்தப்பட்டுள்ளன. 3000 கோடி ரூபாய் 2000 நோட்டுகள் மாற்றப்பட்டதாகவும் எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்தார். 2000 நோட்டுகள் இன்னும் சட்டப்பூர்வமாக மாற்றக்கூடியவை. அதை மாற்றுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மக்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.