இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வீ கேர் டெபாசிட் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் முதிர்ச்சி காலம் கொண்டதாகும். 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 3.5 சதவீதம் வட்டியும், 46 நாட்கள் முதல் ஒரு ஆண்டுக்கு உள்ளான டெபாசிட் திட்டத்திற்கு ஐந்து முதல் 6.5 சதவீதம் வட்டியும், 3 ஆண்டு டெபாசிட் திட்டத்திற்கு 7 முதல் 7.5 சதவீதம் வட்டி, பத்து ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 3.5 சதவீதம் முதல் 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதுவே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வைப்பு நிதி திட்டங்களை தொடங்கும் போது 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு வழங்கப்படும்.