சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஹாக்கி போட்டி நடைபெற்றது. இந்த ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அதன் பிறகு அமைச்சர் உதயநிதி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார் அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தேவையான பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று கூறினார். மேலும் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு உள்ள அரங்கத்தில் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.