இன்றைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் உட்கார்ந்துகொண்டே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே கவுன்டரில் சென்று டிக்கெட் எடுக்கின்றனர். IRCTC-ன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான எளிதான வழிகள் இருக்கிறது. இங்கு நம் பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்து ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். எனினும் பல சமயங்களில் நம் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மறந்து விடுகிறோம். ஆகவே ஐடி மற்றும் பாஸ்வேர்டை மீட்டெடுப்பதற்கான வழியை தற்போது  காணலாம். அதன்படி உங்கள் IRCTC கணக்கின் பாஸ்வேர்டை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இருப்பினும் IRCTCல் கணக்கை உருவாக்க ஜிமெயில் கணக்கு வைத்திருப்பது மிகவும் அவசியம்.

IRCTC கடவுச்சொல்லை மாற்றுவதற்கான வழிமுறைகள்

IRCTC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான irctc.co.in பக்கத்துக்கு சென்று, “Forgot Password” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் IRCTC பயனாளர் ஐடி, பிறந்ததேதி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Next என்பதனை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு OTP வரும். இதையடுத்து பயனாளர் OTP, புது பாஸ்வேர்ட் உள்ளிட வேண்டிய இடத்தில் ஒரு புது பக்கம் திறக்கும். பிறகு, உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு கேப்ட்சாவைக் கிளிக் செய்து கடவுச்சொல்லை புதுப்பிக்க வேண்டும். தற்போது உங்கள் புது கடவுச்சொல் புதுப்பிக்கப்படும்.