பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தையும் (PPF ) மத்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் நல்ல வட்டி லாபமும் கிடைக்கும் நிலையில் 15 வருடங்களுக்கு முன்பாக பணத்தை எடுக்க நினைத்தால் கண்டிப்பாக எடுக்க முடியாது. குறுகிய கால முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஏற்ற திட்டமாக இருக்காது.

இந்த திட்டம் நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கும். இந்நிலையில் தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்காக மத்திய அரசாங்கம் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார் அட்டையை பொது வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஆதார் அட்டையை இணைக்காதவர்களின் கணக்கு முடக்கப்டும் என்றும் நிதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக ஆதார் அட்டையை பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாகும்.