உச்சநீதிமன்றம் ஆனது EPFO தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் அல்லது EPFO  உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால் அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022 ஆம் வருடம் தீர்ப்பளித்தது.  இதன் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கு ஜூலை 11, 2023 வரை மட்டுமே இரண்டு முறை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு 17.49 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்நிலையில் வருங்கால வைப்பு நிதியில் அதிக பென்ஷன் பெறுவதற்கு ஊழியர்களின் சம்பள விவரத்தை தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மே 31ம் தேதி வரை நீட்டித்து இபிஎஃப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து உடனடியாக அதனை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பி.எப்., நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களும், ஓய்வூதியர்களும் விரைவில் அதன் பலனை பெறுவார்கள் என பி.எப்., அமைப்பு தெரிவித்துள்ளது.