நாட்டில் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் மருத்துவத்திற்கான செலவுகள் தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. அதோடு பணவீக்கம் உயர்ந்து இருப்பதால் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியமும் அதிகரித்து உள்ளது. மேலும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கொண்டவர்கள் குறைந்தளவு இருப்பதும் இந்த பிரீமியத் தொகை அதிகரிப்புக்கு காரணம் ஆகும்.

இதன் காரணமாக நடுத்தர குடும்பங்கள் அதிகரித்து வரும் சிகிச்சை செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் வர இருக்கும் பட்ஜெட்டில் சிகிச்சைக்கான நிவாரணம் பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆப்டிமா மனேஜர்ஸ் நிறுவனர் கூறியிருப்பதாவது, மருத்துவ செலவுக்கு 100 சதவீத விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

மேலும் ஹெல்த் பாலிசியின் பிரீமியத்தின் மீதான விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி மருத்துவ செலவு தற்போது அதிகரித்து வருவதால் கூடுதல் காப்பீட்டுடன் பாலிசி எடுக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் பாலிசிக்கான பிரீமியமும் உயரும். எனவே ஹெல்த் பாலிசியின் பிரீமியத்தின் மீதான விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.