நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட் அறிவிப்புகள்:

நாடு முழுவதும் 50 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்டுகள் அமைக்கப்படும்.  நாடு முழுவதும் மருந்து உற்பத்தி ஆராய்ச்சியை மேம்படுத்த ஐசிஎம்ஆர் மூலம் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து நகரங்களிலும் ஒட்டுமொத்தமாக எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 3 கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்.