நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களுடைய எண்ணிக்கை  மற்றும் சாலை கட்டமைப்புகளில் நவீன முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சென்னை மாநகர – பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003இல் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மறு மதிப்பீடு செய்து வேக வரம்பினை மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை முடிவு செய்தது.

இதன் காரணமாக 6 பேர் கொண்ட குழுவினை சென்னை பெருநகர காவல் ஆணையர் அமைத்திருந்தார். இந்த குழுவின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, புது டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் வேக வரம்பு, சாலை கட்டமைப்பு போன்ற காரணங்களை ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.

IIT மெட்ராஸ் மற்றும் IRTE அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களுடன்  சாலை கட்டமைப்பை பொறுத்து வேக நிர்ணயம் குறித்து  விவாதிக்கப்பட்டன. சென்னை பெருநகரங்களில் சாலைகளில் வாகனம்  வரம்பு மாற்று அமைக்கப்பட்டு இருக்கிறது.

லைப் மோட்டார்,   ஹெவி மோட்டார், டூவீலர்,  ஆட்டோ ரிக்ஷா என வகைப்படுத்தப்பட்டு, லைப் மோட்டார் சைக்கிள் 60 கிலோ மீட்டர் வேகத்திலும்,  ஹெவி மோட்டார் வாகனம்  50 கிலோமீட்டர் வேகத்திலும்,  இரண்டு சக்கர வாகனம் 50  கிலோமீட்டர் வேகத்திலும், ஆட்டோக்கள்  40 கிலோமீட்டர் வேகத்திலும், அதுமட்டுமல்லாமல் இந்த வாகனங்கள் அனைத்துமே நெருக்கடி ஏரியாகளில் 30 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். இது.04.11.2023இல் இருந்து  அமலுக்கு வருகிறது என  போக்குவரத்து துறை ஒரு அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள்