கோவக்காய் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படும் கோவக்காயின் நன்மைகள் என்னவென்பது குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக அனைத்து காய்கறிகளிலும் ஏதாவது நன்மைகள் தரக்கூடிய சத்துக்கள் அடங்கியிருக்கும். அதிலும் சிறிது காய்கறிகளின் மருத்துவ குணங்கள் ஏராளமாக கட்டி கிடைக்கும். அப்படி ஒரு காய்தான் கோவக்காய்.

கோவக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து நலம் தருகிறதாகவும் உடல் பருமனை குறைக்க உதவும் கோவக்காய் வேரில் இத்தகைய பண்புகள் இருப்பதாகவும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றங்களை சரி செய்து செரிமான செயல்முறையை நன்றாக இருக்கும்போது உடல் பருமனை குறைக்க உதவுகிறது. பச்சையாகவே கோவக்காய் மென்று துப்பினால் வாய்ப்புண் ஆறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் கோவக்காய் பித்தம், ரத்த பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள புழுப்பூச்சிக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும் எனவும் சொல்லப்படுகிறது. கோவக்காயில் உடல் சூட்டை தணிக்கும் தன்மையும் அத்துடன் உடலில் உள்ள நச்சு தன்மைகளை நீக்கும் குணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் உடலில் இரும்புச் சத்து குறைவதால் நம் உடலில் விரைந்து சோர்வடைந்து போவது தெரியும்.

அப்போது கோவக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்பு சத்து குறைபாடு நீங்குவதுடன் உடலில் சோர்வு பிரச்சனையையும் நீங்க உதவும் என விபுணர்கள் கூறுகின்றனர். இதனுடன் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கவும் கோவக்காய் உதவுகிறது. மேலும் கோவக்காய் இதய செயல்பாட்டை மேம்படுத்தி இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருக்க உதவியாக இருக்கிறது என மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர்.