இந்தியா முழுவதும் போலி தங்க நகைகள் விற்பனையை தடுப்பதற்கு பிஐஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது எச். யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டும் தான் இனி விற்பனை செய்ய வேண்டும் என பிஐஎஸ் அறிவித்துள்ளது. இந்த முத்திரை இல்லாத நகைகளை இனி தங்க கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் எச்.‌ யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் நாடு முழுவதும் தங்கம் அதிகம் விற்பனை செய்யப்படும் 339 மாவட்டங்களில் முதற்கட்டமாக விற்பனை செய்யப்படும். இந்த மாவட்டங்களில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்த முத்திரை பதித்த தங்க நகைகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் கேரள மாநிலத்தில் இடுக்கி  மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.