தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் வியாபாரிகள் தங்களுடைய லாப நோக்கத்திற்காக எம்ஆர்பி விலையை காட்டிலும் கூடுதலாக பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். லீகல் மெட்ராலஜி சட்டம் 2009 விதியின்படி எந்த ஒரு கடைக்காரரும் எம்ஆர்பி விலையை விட கூடுதல்  விலைக்கு  பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் ரூபாய் 2000 வரை அபராதம் விதிக்கப்படும். இதன் பிறகு கடைக்காரர் எம்ஆர்பி விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு பொருளை விற்றால் தேசிய நுகர்வோர் உதவி எண் 1915 க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

அதற்குப் பிறகு சட்டத்தின் விதிமுறைகளை அறிந்து கொண்டு உங்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீமைகளுக்கு எதிராக குரல் கொடுங்கள். கடைக்காரர் ஒரு பொருளை எம்ஆர்பி விலையை காட்டிலும் ஒரு ரூபாய் அதிகமாக விற்பனை செய்தால் கூட உடனடியாக புகார் அளிக்கலாம். இது குறித்து விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.