பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான சியோமி (Xiaomi) இந்தியாவில் மிகவும் மலிவு விலை தொடரை அறிமுகப்படுத்தப்போகிறது. இதற்கு ரெட்மி ஏ2 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. நிறுவனம் போன் வெளியீடு தொடர்பான டீசர்களை வெளியிடத் துவங்கியுள்ளது. ரெட்மி ஏ2 தொடர் சில ஐரோப்பிய சந்தைகளில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதாவது, தொடரில் 2 போன்கள்(A2 மற்றும் A2+) இருக்கும். சியோமி நிறுவனமானது கடந்த வருடம் இந்தியாவில் A1 தொடரின் கீழ் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. 2 ஸ்மார்ட் போன்களின் விலையும் ரூ. 10,000 க்கு கீழ் நிர்ணயிக்கப்பட்டது. இத்தகைய நிலையில் இதன் விலையும் சுமார் 10 ஆயிரமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன் MediaTek Helio G36 செயலி வாயிலாக இயக்கப்படும். போன்கள் 5000 mAh பேட்டரி மற்றும் 10 W சார்ஜிங் ஆதரவை வழங்கும். போன் பெட்டியில் ஒரு சார்ஜர் இருக்கிறது. போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது. ஃபோனில் 8 MP முதன்மை கேமரா மற்றும் QVGA லென்ஸ் இருக்கிறது. செல்ஃபி எடுப்பதற்கு 5MP முன் கேமரா இருக்கிறது.