கேரளாவில் ASAP ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முறை மாணவர்களுக்கான 3வது உச்சிமாநாடு நடந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியாதவது, Young Innovators Programme மற்றும் Industry on Campus Scheme போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கு படிக்கும்போது வேலைவாய்ப்பை வழங்கும்.

அதாவது, மாணவர்கள் படிப்புடன் வேலை வாய்ப்புகளை உருவாக்க இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதோடு Young Innovators Programme எனும் திட்டம் வாயிலாக தொழில்துறையில் உள்ள தேவைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்திசெய்வதற்கான தயாரிப்புகள், சேவைகள் (அ) மாடல்களை புதுமைப்படுத்துவதற்கான கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க பெரிதும் உதவி புரியும்.

மேலும் பிற படிப்புகளுக்கும் கட்டாயப் பயிற்சி முறை விரிவுபடுத்தப்படும். அதன்பின் மாணவர்கள் படிக்கும்போது சம்பாதிக்க உதவுவதற்கு “கர்மாச்சாரி” என்ற திட்டத்தை துவங்குவதாகவும் அறிவித்துள்ளார். இத்திட்டம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செயல்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.