கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள கல்லம்பலம் பகுதியில் வசித்து வருபவர் நோஃபால்(18). இவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதனை சோஷியல் மீடியாவில் பதிவேற்றி வந்துள்ளார். இதனால் இவர் மீது போக்குவரத்துத்துறை சார்பாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 முறை அபராதம் விதித்து பைக்கையும் பறிமுதல் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு பைக் திருவனந்தபுரம் வெஞ்ஞாறு மூடு போலீஸ் நிலையத்தில் இருந்து நோஃபால் கையில் ஒப்படைக்கபட்டு உள்ளது. அதன்பின் பைக் கிடைத்த 2 நாட்களில் கடந்த வியாழக்கிழமை அன்று கல்லூரி மாணவிகள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அவர்கள் முன் சாகசம் காட்டுவதற்காக திடீரென்று பைக் வீல்லிங்கில் ஈடுபட்டுள்ளார் நோஃபால்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவர் மீது மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகி உள்ளது. சிசிடிவி ஆதாரங்களை வைத்து கேரளா போக்குவரத்துத்துறை இளைஞர் நோஃபாலை  கைது செய்துள்ளனர்.

https://twitter.com/jaffermohaideen/status/1625146900398886915?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1625146900398886915%7Ctwgr%5Ecb76966d98a7c82e844804d6a8dc9737eaa58424%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Findia%2Fshocking-cctv-video-kerala-thiruvanthapuram-boy-hits-girl-while-bike-wheeling-432460