நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 40 தொகுதிகளுக்குமான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் மக்களவைத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் கூட்டணி கட்சிகளான தேமுதிகவிற்கு 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்த சூழலில் அதிமுக முதல் கட்டமாக 16 வேட்பாளர்களும், இரண்டாவது கட்டமாக 17 வேட்பாளர்களையும் அறிவித்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி 40 தொகுதிகளுக்குமான அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, வடசென்னை – ஜெயக்குமார், தென் சென்னை – கோகுல இந்திரா, மத்திய சென்னை – தமிழ் மகன் உசேன், ஸ்ரீபெரும்புதூர் – பெஞ்சமின், காஞ்சிபுரம் – பா வளர்மதி, வேலூர் – தம்பிதுரை, அரக்கோணம் – கே.சி வீரமணி, கிருஷ்ணகிரி – கே.பி முனுசாமி, தர்மபுரி – கே.பி அன்பழகன், திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஆரணி – சேவூர் ராமச்சந்திரன், விழுப்புரம் – சி.வி சண்முகம், கள்ளக்குறிச்சி – ப.மோகன், சேலம் – பரமசிவம் நாமக்கல் – தங்கமணி, ஈரோடு – செங்கோட்டையன், திருப்பூர் – எஸ்.பி. வேலுமணி, நீலகிரி – தனபால், கோவை மற்றும் பொள்ளாச்சி எஸ் பி வேலுமணி, திண்டுக்கல் – சீனிவாசன், திருச்சி மற்றும் கரூர் சி.விஜயபாஸ்கர், பெரம்பலூர் – தங்கமணி, கடலூர் – சி.வி சண்முகம், சிதம்பரம் – செம்மலை, மயிலாடுதுறை – ஓ.எஸ் மணியன், நாகை மற்றும் தஞ்சை தொகுதிக்கு ஆர்.காமராஜ் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை – வி.வி ராஜன், மதுரை – நத்தம் விஸ்வநாதன், தேனி – ஆர்பி உதயகுமார், விருதுநகர் – ராஜேந்திர பாலாஜி, ராமநாதபுரம் – ஆர்பி உதயகுமார், தூத்துக்குடி – கடம்பூர் ராஜு, தென்காசி – ராஜலட்சுமி, நெல்லை – இசக்கி சுப்பையா
குமரி – தளவாய் சுந்தரம், புதுச்சேரி தொகுதிக்கு சி.வி சண்முகம் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம்  செய்யப்பட்டுள்ளனர்.