தென் இந்திய திரையுலகின் முக்கிய டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010 ஆம் வருடம் வெளியாகிய படம் பையா. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படங்கள் தோல்வியை சந்தித்தது. அண்மையில் இவர் இயக்கிய “வாரியர்” படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர்.

சமீபத்தில் லிங்குசாமி உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் புது படம் வர வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்த நிலையில் லிங்குசாமி பையா திரைப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா, ஹீரோயினியாக ஜான்வி கபூர்  நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளிவரவில்லை.