நீலகிரி முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு பன்றி காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பன்றிகள் திடீரென உயிரிழந்ததால், அவற்றின் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதேபோன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள காட்டு பன்றிகளுக்கும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.