தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் போன்ற பல முக்கிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளது. மேலும் மத்திய மந்திரியை சந்தித்த பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் குரல் கொடுக்கிறோம். நீட் தேர்வு எதிர்ப்பு எப்போதும் தொடரும். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய மந்திரி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.