தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து அமைச்சர் பொன்முடி மேடையில் பேசினார்.

அப்போது உங்கள் கிராமத்தில் தெருவிளக்கு வசதி, சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி போன்றவைகளை நான்தான் செய்து கொடுத்தேன் என்று கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த சில பெண்கள் எழுந்து குடிநீரே வருவது கிடையாது என்று கூறினர். இதனால் ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி அப்படியே இந்த கிராமத்தில் எனக்கு ஓட்டு போட்டு கிழி கிழின்னு  கிழிச்சுட்டீங்க. இதுல கேக்க வேற வந்துட்டீங்களா. உட்காருங்கள் என்று ஆவேசத்துடன் பேசினார்.

அதோடு இந்த அறங்குறிக்கை கிராமத்தில் நான் எப்போது வந்தாலும் நீங்க இப்படித்தான் பேசுவீங்க என்று எனக்கு தெரியும் என்று அமைச்சர் பொன்முடி கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் அமைச்சர் பொன்முடி ஏற்கனவே பெண்களின் இலவச பேருந்து பயணத்தை ஓசி பஸ் என்று கூறியது கிராம மக்களை ஆபாசமாக பேசியது என சர்ச்சையாக பேசிய நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.