அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி இப்படித்தான் இருக்கும் என கூறப்படுகிறது.. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்திய அணிக்கு ஒரு மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, ஜூலை 12ம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.அடுத்து இந்திய அணிக்கு ஓய்வு இல்லை. அடுத்து ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை என பெரிய தொடர்கள் உள்ளன.

அயர்லாந்து தொடர் :

இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஆசிய கோப்பைக்கு முன்னதாக தொடர் நடைபெறும். இந்த தொடருக்கு இளம் இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்டவணை :

இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கடைசி இரண்டு டி20 போட்டிகள் ஆகஸ்ட் 20 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

கேப்டன் :

இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதேபோல் ஐபிஎல் 16வது சீசனில் 9.35 என்ற எகானமி ரேட்டுடன் 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. இதேபோல், 16வது சீசனில் 3 போட்டிகளில் 7.54 என்ற எக்கனாமியுடன் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்திய வீரேந்திர சேவாக்கின் சகோதரி மகன் மயங்க் டாகர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

புதுமுக வீரர்கள் :

இது தவிர, 11 புதிய இந்திய வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிதேஷ் சர்மா, துருவ் ஜோரல், யாஷ் தாகூர், ஆகாஷ் மத்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், மயங்க் தாகர் போன்ற புதுமுகங்கள் விளையாட வாய்ப்புள்ளது.

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி ? : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), யஷ்ஸ்வி ஜெய்ஷ்வால், பிரித்வி ஷா, ஜிதேஷ் சர்மா, துருவ் ஜோரல், ரிங்கு சிங், திலக் வர்மா, மயங்க் டாகர், சுயாஷ் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், யாஷ் தாகூர், ஆகாஷ் மத்வால், மோக்சின் கான் , அர்ஷ்தீப் சிங்.