செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுவரை எந்த தேர்தல் களத்திலாவது  நான் கூட்டணி வச்சிருக்கேனா..?  தனித்து தான் சண்டைக்கு நிக்கேன். நீங்க நான் ஒரு கருத்து வச்சா ? அந்த கருத்து தப்பு. இப்படி சொல்ல கூடாது அப்படி தான் நீங்க தர்க்கம் பண்ணனுமே தவிர…  அவதூறுகளை அள்ளி வீச கூடாது. நான் என்ன புரிந்து கொள்வேனா.. உன் மீது வைக்கப்படுகின்ற விமர்சனம் உண்மை இல்லை என்றால் ? நீ அதற்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை என்கிறான்.

இது நான் படிச்ச கோட்பாடு. அது உண்மை இல்லன்னா…  அதுக்கு நீ விளக்கம் சொல்லவும் தேவையில்லை, கோவபப்படவும் தேவை இல்லை என்கிறான். அவதூறுகளை கூட தாங்கிக் கடந்து போக முடியாதவன் அற்ப வெற்றியை கூட தொட முடியாது. இதெல்லாம் நான் படிச்ச கோட்பாடு. அதன்படி வாழ்ந்து போறவன். நான்  கருத்தோடு நிற்கும்போது நீங்களும் கருத்தோடு தான் என்கிட்ட மோதணும்.

நான் கத்தியோடு நிற்கும்போது நீ கத்தியோடு வா… நீ கத்தியோடு நின்றால் ? நான் கத்தியோடு வாரேன். நீ துப்பாக்கியோட வந்தா ? நான் துப்பாக்கியோட வரேன்… நீ அறிவாயுதத்தோடு வந்தால் நான் அறிவாயுதத்தோடு வரேன்.  ஆனால் ஆகச் சிறந்த கருத்துக்களோடு நிற்கிற என்னை  நீ எதிர்கொள்ள முடியாமல்….  நீ நேருக்கு நேர் வராமல் அங்கிட்டு நின்னு…  இருட்டுக்குள்ள  ரெண்டு பொம்பளைய நிறுத்தி வைத்துவிட்டு…  கல் எடுத்து எறிஞ்சா?  அது எப்படி ?

நான் உயர்ந்த லட்சியத்தை தூக்கிட்டு வாரேன்..  நீ இரண்டு லட்சுமியை தூக்கிட்டு வந்து நின்னு சண்டை போட்டுட்டு இருந்தா எப்படி ?அரசியல் களத்தில் எதிர்கொள்வதற்கு… என்ன வீழ்த்துவதற்கு… நீங்கள் கையில் எடுத்துள்ள கருவி. அது ரொம்ப கேவலமானது,  ரொம்ப அசிங்கமானது என தெரிவித்தார்.